இரண்டாம் பாகமாக உருவாகும் பிரபுதேவாவின் சூப்பர் ஹிட் படம்

  • IndiaGlitz, [Tuesday,September 18 2018]

பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய சூப்பர் ஹிட் த்ரில் படமான 'தேவி' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

நடிகர் பிரபுதேவா கோவை சரளாவுடன் உள்ள புகைப்படம் ஒன்றை பதிவு செய்து 'தேவி 2' படத்திற்காக மொரீஷியஸ் நாட்டில் இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து 'தேவி 2' உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் ரஜினி, கமல் முதல் கிட்டத்தட்ட அனைத்து பெரிய நடிகர்களும் இரண்டாம் பாக படத்தில் நடித்து வருவதால் இரண்டாம் பாக சீசன் களை கட்டியுள்ளது. இந்த வரிசையில் உருவாகும் 'தேவி 2' திரைப்படமும் முதல் பாகம் போலவே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.