பிரபுதேவா இயக்கும் அடுத்த படம் இன்று ஆரம்பம்! ஹீரோ யார்?
- IndiaGlitz, [Monday,April 01 2019]
நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் இந்திய திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபுதேவா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருந்த பிரபுதேவா சமீபகாலமாக தமிழ்ப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு இந்தி படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார். 'டபாங் 3' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஹீரோ பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் என்பது குறிப்பிடத்தக்கது.
'டபாங் 3' படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. சல்மான்கான் தயாரிக்கும் இந்த படத்திற்கு மகேஷ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
டபாங் படத்தின் முதல் இரண்டு பாகங்களிலும் சல்மான்கான் நடித்திருந்தபோதிலும் இரண்டு படங்களையும் வெவ்வெறு இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார்.