சந்திரபாபு வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகர்?

  • IndiaGlitz, [Thursday,January 31 2019]

எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இரு ஜாம்பவான்களும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோதே அவர்களுக்கு இணையான புகழை பெற்றவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. வாழ்க்கையில் புகழின் உச்சத்தை பார்த்த சந்திரபாபு, கடைசி காலத்தில் வறுமையின் கொடுமையையும் அனுபவித்தவர்.

இந்த நிலையில் 'அமரன்' , சீவலப்பேரி பாண்டி உள்பட ஒருசில திரைப்படங்களை இயக்கிய கே.ராஜேஷ்வர், சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் சந்திரபாபு கேரக்டரை ஏற்று நடிக்கும் நடிகர் யாராக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது

இந்த நிலையில் பிரபல நடிகர் பிரபுதேவா, சந்திரபாபு கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சந்திரபாபுவின் உயரம், உடல் எடை, உடல் மொழி ஆகியவை பிரபுதேவாவுக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதால் ஒரு நடிப்பு மேதையின் கேரக்டரில் அவர் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

அமிதாப்பின் அடுத்த படத்தில் இணையும் 'மெர்சல்' டீம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக 'உயர்ந்த மனிதன்' என்ற தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை 'கள்வனின் காதலி' படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கவுள்ளார்

பொது ரசிகர்களை சென்றடையுமா பேரன்பு?

ராம் இயக்கிய பேரன்பு திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.

மீண்டும் ஒரே படத்தில் இணையும் சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமாவில் சகோதர நடிகர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பது அபூர்வமாக நடக்கும் நிகழ்வு.

இன்று விஜயகாந்துக்கு மறக்க முடியாத கொண்டாட்டமான நாள்

விஜயகாந்த் உடல்நல சிகிச்சைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றாலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என ஒவ்வொரு முக்கியமான நாட்களுக்கும் வாழ்த்து கூற அவர் மறந்ததில்லை

தல 59: வித்யாபாலன் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

'தல 59' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே