பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் வெற்றி ஜோடி

  • IndiaGlitz, [Sunday,July 22 2018]

பார்த்திபன் இயக்கிய 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் அவர் விரைவில் 'உள்ளே வெளியே 2' திரைப்படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் பார்த்திபன் இயக்கத்தில் ஏற்கனவே திரையில் வெற்றி பெற்ற ஜோடி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா ஜோடியாக நடித்த 'தேவி' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகிய நிலையில் இந்த வெற்றி ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. இந்த படத்தைத்தான் பார்த்திபன் இயக்கவுள்ளதாகவும், இதுவொரு கமர்ஷியல் த்ரில்லர் படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.

பிரபுதேவா தற்போது 'பொன்மாணிக்கவேல்' என்ற படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் லக்ஷ்மி உள்பட ஒருசில படங்களிலும் நடித்து வரும் பிரபுதேவா விரைவில் பார்த்திபன் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பெரியார் குத்து'க்காக நடனம் ஆடிய சிம்பு

சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி நல்ல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி அவ்வப்போது தனிப்பாடல்களையும் வெளியிட்டு வருவது வழக்கம்.

'சர்கார்' படத்தின் அடுத்தகட்ட பணிக்கு செல்லும் தளபதி விஜய்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை தீபாவளி அன்று திரையில் திட்டமிட்டிருப்பதால் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.

பொன்னம்பலம்-மும்தாஜ் நேருக்கு நேர் மோதல்: என்ன செய்ய போகிறார் கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களுக்கும் மேல் ஆகியும் இதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்களின் திறமையின்மையால் இன்னும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களால் ஒன்றிப்போக முடியவில்லை.

அனிருத்தின் இரண்டாவது படத்தில் நானி?

தமிழ் திரையுலகில் இளம் இசைப்புயல் அனிருத் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு அவர் தெலுங்கு திரையுலகில் Agnyaathavaasi என்ற படத்திற்கு இசையமைத்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட ஆசை: உலகப்புகழ் பெற்ற பாடகி

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே பல உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார். அதேபோல் 'ஸ்லம்டாக் மில்லியனர்', 127 ஹவர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.