பிரபுதேவா, சஞ்சிதா ஷெட்டி இணைந்து சந்தித்த பிரபலம்

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலர் மகா அவதார் பாபாஜியின் தீவிர பக்தர்களாக இருந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாபாஜியின் சீடர்களில் ஒருவரான பரமஹம்ச பிரஜானந்த மஹாராஜ் என்பவரை கோலிவுட் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான பிரபுதேவா மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் சந்தித்து ஆசி பெற்று உள்ளனர்

பிரபுதேவா மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஆகிய இருவரும் பரமஹம்ச பிரஜானந்த மஹாராஜ் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பரமஹம்ச பிரஜானந்த மஹாராஜ் அவர்கள் பாபாஜியின் ஆன்மீக வழியை பின்பற்றி வரும் சாமியார் மட்டுமின்றி அவர் யோகா பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார் என்பதும் அவரது யோகா பயிற்சி மையத்தில் ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் பிரபுதேவா மற்றும் சங்கீதா செட்டி ஆகியோர் தொடர்ச்சியாக யோகா செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள ’பல்லு படாம பார்த்துக்கோ’ என்ற திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது. அதேபோல் பிரபுதேவா நடித்த ’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

என்ன நடக்கிறது மத்தியப் பிரதேச சட்ட சபையில்???

கடந்த 2008 டிசம்பரில் மத்தியப் பிரதேச சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114 இடங்களை வென்றது. 2 பகுஜன் சமாஜ், 1 சமாஜ்வாடி

பிரபல நடிகரின் மகனை காதலிகின்றாரா யாஷிகா? வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாசிகா ஆனந்த் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை அவ்வப்போது ஏற்படுத்தி வருவார் என்று தெரிந்தே 

டிக்டாக்கில் ஆபாசத்தின் உச்சம்: பணம் பறித்த 'போலி' கும்பல்

டிக்டாக் செயலியில் ஒருசில இளம்பெண்கள் ஆபாசமான பதிவுகளை செய்வதும் அதன் பின்னர் பிரச்சனை ஏற்படும் போது போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது

திமுக கழகத்தின் அடுத்த பொதுச்செயலாளர் துரைமுருகன்!!!

திமுகவின் பொதுச் செயலாளராக 1977 முதல் பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவை யொட்டி திமுகவின் அடுத்த பொதுச்

விஜய்சேதுபதியின் 'மாஸ்டர்' பேச்சுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!

நேற்று நடைபெற்ற 'மாஸ்டர்' இசை வெளியிட்டு விழாவில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பேசியபோது, கொரோனா குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும்,