'தளபதி 68' படத்தில் இணையும் பிரபல சகோதரர்கள்.. அன்பறிவ் அல்ல.. இது வேற..!

  • IndiaGlitz, [Saturday,September 30 2023]

’தளபதி 68’ திரைப்படத்தில் ஏறகனவே சகோதரர்களான அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு பிரபல சகோதரர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் ‘தளபதி 68’ உருவாக உள்ளது. இந்த படத்தின் பூஜை வரும் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் அன்றே இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு முக்கிய கேரக்டரில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவரது சகோதரர் ராஜூ சுந்தரம் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிய இருப்பதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 3ஆம் தேதி படமாக்கப்படும் பாடலுக்கு இவர் தான் டான்ஸ் மாஸ்டர் என்று கூறப்படுகிறது. விஜய்யின் சமீபகால படங்களில் நடன இயக்குனர்களாக ஜானி மாஸ்டர், தினேஷ் மாஸ்டர் ஆகியோர் பணிபுரிந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜூ சுந்தரம் மாஸ்டர் பணிபுரிய இருப்பதால் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.