close
Choose your channels

GOAT படத்தில் பிரபுதேவா, பிரசாந்த் கேரக்டர் இதுவா? கசிந்த ரகசியம்..!

Tuesday, January 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய், தந்தை - மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் டைம் டிராவல் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. ’
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர் என்பதும் விஜய்யுடன் மேற்கண்ட மூன்று பேரும் இருக்கும் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் படக்குழுவினர்களிடமிருந்து கசிந்த தகவலின்படி பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் தந்தை விஜய்யின் நண்பர்களாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment