'நாட்டு நாட்டு' பாடலுக்கு செம நடனம் ஆடிய பிரபுதேவா குழுவினர்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,March 18 2023]

பிரபுதேவா மற்றும் அவரது நடன குழுவினர் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆர்ஆர்ஆர்’. இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது என்பதும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடல் சமீபத்தில் ஆஸ்கார் விருதை பெற்றது என்பது தெரிந்ததே.

மேலும் இந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகரும் இயக்குனரும் நடன இயக்குனருமான பிரபுதேவா தனது நடன குழுவினர்களுடன் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளனர்

பிரபுதேவா மற்றும் அவரது நடனக்குழுவினர் சுமார் 100 பேருக்கு மேல் ஒரே மாதிரி ஸ்டெப்பில் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய இந்த வீடியோவை பார்க்க கண் கோடி வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.