பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணி....புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது....!

  • IndiaGlitz, [Friday,August 06 2021]

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும், புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் துவங்கியுள்ளது.

’கத சொல்லப் போறோம்’, ‘குலேபகாவலி’, ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் கல்யாண். தற்போது அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் பிரபுதேவா நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும், தேவதர்ஷினி, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையானது இன்று புதுச்சேரியில் துவங்கியுள்ளது. கல்யாண் இயக்கிய பெரும்பாலான படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பதால், இத்திரைப்படத்திலும் காமெடிக்கு பஞ்சமில்லை. ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.