பிரபுதேவாவின் 60வது படம்.. இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவாவின் 60வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 1994 ஆம் ஆண்டு ’இந்து’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா, அதற்கு முன் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், நடன இயக்குனர் மட்டுமின்றி தளபதி விஜய் நடித்த ’போக்கிரி’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களையும் அவர் இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் பிரபுதேவா இதுவரை 59 திரைப்படங்கள் நடித்துள்ள நிலையில் 60-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வினோ வெங்கடேசன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ராய் லட்சுமி நடித்த ‘சிண்ட்ரெல்லா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபு தேவா, அஞ்சு குரியன், ராய் லட்சுமி, அனுசியா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படம் வரும் மார்ச் மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments