close
Choose your channels

வெட்கச்சிரிப்புடன் பிரபுவின் தோளில் சாய்ந்த குஷ்பு: அருகில் யார் இருக்கிறார் தெரியுமா?

Thursday, September 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 90களில் பிரபு மற்றும் குஷ்பு இணைந்து பல திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது பிரபுவின் தோளில் குஷ்பு சாய்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்மத்தின் தலைவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை குஷ்பு என்பதும் அவர் அந்த படத்தில் பிரபு ஜோடியாக நடித்தவர் என்பதும் தெரிந்ததே. அதன்பிறகு ’மைடியர் மார்த்தாண்டன்’ ’பாண்டிதுரை’ ’சின்னத்தம்பி’ ’வெற்றி விழா’ உள்பட ஒருசில திரைப்படங்களில் பிரபுவுடன் குஷ்பு இணைந்து நடித்துள்ளார் என்பதும் இவற்றில் பெரும்பாலான திரைப்படம் வெற்றி திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பிரபுவுடன் இணைந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படத்தில் பிரபுவுடன் சரத்குமாரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அருகில் இருந்தால் ஒருபோதும் மந்தமான மனநிலை இருக்காது என்றும் கேப்ஷனாக குஷ்பு பதிவு செய்துள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படத்தில் பிரபுவின் தோளில் சாய்ந்து வெட்கத்துடன் குஷ்பு சிரித்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment