ஜூன் 8 முதல் மேலும் ரூ.100 கோடி வசூல் செய்ய காத்திருக்கும் 'பாகுபலி'

  • IndiaGlitz, [Tuesday,May 03 2016]

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான 'பாகுபலி' திரைப்படம் ஏற்கனவே ரூ.600 கோடி வசூல் செய்து தென்னிந்தியாவில் மிக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த படம் மேலும் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆம் வரும் ஜூன் 8 முதல் இந்த படம் பிரெஞ்ச் மொழியில் பிரான்ஸ் நாட்டில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறும்போது, 'பாகுபலி பிரான்சில் வெளியாவதன் மூலம் மேலும் ரூ.100 கோடி வசூல் செய்ய காத்திருக்கின்றது' என்று கூறியுள்ளார்.
பிரெஞ்ச் மொழியின் பல திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ் மொழி படம் ஒன்று பிரான்ஸ் நாட்டில் ரிலீஸ் செய்யப்படுவது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

More News

விக்ரமுடன் கருத்துவேறுபாடா? சூர்யாவின் பதில்

சீயான் விக்ரமுடன் நடிகர் சூர்யா பிதாமகன்' படத்தில் இணைந்து நடித்திருந்தபோதிலும் இருவருக்கும் இடையே சமீபகாலமாக கருத்துவேறுபாடு...

அஜித்துக்கு விஜய் அம்மா கூறிய அறிவுரை

'தல' அஜித் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு கோலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்...

ஒரே படத்தில் இணையும் மணிரத்னம் நாயகர்கள்

'ஓகே கண்மணி' நாயகன் துல்கர் சல்மான் நடித்த மலையாள படமான 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவனை நடிக்க வைக்க முயற்சிகள்...

நடிகர் சங்க தலைவர் நாசருக்கு கிடைக்கும் கெளரவ பட்டம்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு 'கல்யாண அகதிகள்' என்ற படத்தில் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் நாசர்...

'24' படத்தின் பட்ஜெட் எவ்வளவு? மனம் திறந்த சூர்யா

வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள சூர்யாவின் '24' திரைப்படம் மற்றொரு பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது...