பாகுபலி டூ ஆதிபுருஷ்… எய்ட்பேக் நடிகர் பிரபாஸின் பிட்னஸ் ரகசியங்கள் என்ன?
- IndiaGlitz, [Wednesday,May 10 2023]
இயக்குநர் ஓம் ரவுத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்திற்கான டிரெய்லர் நேற்று 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகி ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் 6 அடி உயரம்கொண்ட நடிகர் பிரபாஸ் எப்படி திடீரென்று இவ்வளவு எடையுடன் அதுவுட் பிட்டாக இருக்கிறார் என்று ரசிகர்கள் படு ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற நடிகராக இருந்துவரும் பிரபாஸ் ‘பாகுபலி‘ திரைப்படத்திற்காக 20 கிலோ எடையை கூட்டினார். அதேவேளையில் ‘சாஹோ‘ திரைப்படத்திற்காக 10 கிலோ எடையை குறைத்தார். தற்போது ‘ஆதிபுருஷ்‘ திரைப்படத்திற்காக மீண்டும் அதிக எடையுடன் அதுவும் எய்ட்பேக் வைத்து படு பிட்டாகக் காணப்படுகிறார். இத்தகைய டிரான்ஸ்பர்மேஷனுக்காக அவர் என்ன செய்கிறார்? அவர் எப்படி தன்னுடைய எடையை கூட்டவும் குறைக்கவும் செய்கிறார்? எப்படி அவரால் பிட்டாக இருக்க முடிகிறது என்று பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அவருடைய பிட்னஸ் குறிப்புகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
எய்ட்பேக் நடிகர் பிரபாஸின் பிட்னஸ் ரகசியங்கள்
நடிகர் பிரபாஸ் வாரத்தில் ஆறு நாட்கள் தவறாமல் உடற்பயிற்சி மற்றும் வொர்க்அவுட் செய்வாராம். ஒருவேளை, ஒரு நாளைக்கு 12 மணிநேரம் ஷுட்டிங் இருந்தாலும் தவறாமல் செய்வாராம். அதேபோல வெளிநாடுகளுக்குச் சென்றாலும் ஒருபோதும் வொர்க் அவுட்டை தவறவிடமாட்டாராம்.
வொர்க்அவுட் மற்றும் உடற்பயிற்சி மூலம் அவருக்கு பிட்டான உடல்தோற்றம் மற்றும் தசைகளுக்கு பயிற்சி கிடைப்பதாகக் கூறியுள்ளார்.
உடல் எடையைத் தவிர ஆரோக்கியம் மற்றும் இதயத் துடிப்புக்காக குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உட்கொண்டிருக்கிறார். மேலும் வாக்கிங், சைக்கிளிங், நீச்சல் போன்றவற்றையும் செய்திருக்கிறார்.
மேலும் நடிகர் பிரபாஸின் பட்டியலில் யோகா தவறாமல் இடம்பிடிக்கிறது. இந்த யோகா பயிற்சி உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் மனஒருநிலைப் படுத்தலுக்கு பயன்படுவதாக அவர் கருதியுள்ளார்.
இந்நிலையில் பாகுபலியை விட ஆதிபுருஷ் திரைப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் பல மடங்கு உடல் எடையை அதிகப்படுத்தி இருக்கிறார். இதற்காக இயற்கையான அணுகுமுறையைப் பின்பற்றிய அவர் 3 வேளை உணவிற்குப் பதிலாக 6 வேளை உணவை உட்கொண்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் அதிக புரதம் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் ருசியான உணவு வகைகளையும் அவர் தவிர்க்கவில்லை.
உடலின் நீர் தன்மைக்காக அதிக தண்ணீரை பருகி இருக்கிறார். ஆனால் குளிர்பானங்கள், மது, வறுத்த பொருட்கள் போன்றவற்றை தவிர்த்து விடுகிறார்.
மேலும் அதிக எடைக்காக சிக்கன், மீன், முட்டை மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் உட்கொண்டுள்ளார். அதிலும் ஒரு நாளைக்கு 15 முட்டைகள் வரை சாப்பிட்டதாகத் தகவல் கூறப்படுகிறது.
சர்க்கரை பொருட்களை தவிர்த்த அவர் இனிப்புக்காக பிரவுன் சர்க்கரையை எடுத்துக் கொண்டுள்ளார். பிரவுன் ரைஸ் மற்றும் ஆரோக்கியம் மிகுந்த உருளை கிழங்குகளை உட்கொண்டிருக்கிறார்.
வைட்டமின் சமநிலைக்காக இறைச்சியுடன் பழங்கள், காய்கறிகளை உட்கொண்டிருக்கிறார். ஆதிபுருஷ் தோற்றத்திற்காக 6 வேளை உணவு அதிலும் 3 வேளை அதிக உணவுகளை எடுத்துக்கொண்டு 15 முட்டை வரைக்கும் நடிகர் பிரபாஸ் சாப்பிட்டதாகத் தகவல் கூறப்படுகிறது.
அதேபோன்று ஆதிபுருஷ் திரைப்படத்தில் லட்சுமணன் வேடத்தில் நடித்த நடிகர் சன்னி சிங்கும் இந்தத் திரைப்படத்திற்காக தனது உடல்எடையை அதிகரித்துள்ளார். இதுகுறித்து கருத்து பகிர்ந்த அவர் நாங்கள் ஸ்டீராய்டுகளை எடுத்துக் கொள்ளவில்லை. இயற்கையான உடல் பருமனுக்காக உழைத்தோம். 30% வொர்க்அவுட், 70% உணவு திட்டம் மட்டுமே இதைச் சாத்தியப்படுத்தியது என்று கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறது.