ஷாருக்கானுடன் மோதல் உறுதி.. பிரபாஸின் 'சலார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,September 29 2023]

ஷாருக்கான் நடித்த ’டங்க்கி’ என்ற திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்மஸ் விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதே தேதியில் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஷாருக்கானின் ’டங்க்கி’ மற்றும் பிரபாஸின் ‘சலார்’ ஆகிய திரைப்படங்கள் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம் ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஷாருக்கானின் ’பதான்’ மற்றும் ’ஜவான்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் ’டங்க்கி’ திரைப்படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘சலார்’ திரைப்படம் அதற்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.

பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வரும் இந்த படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ருர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ’கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.