சூர்யாவுக்கு நன்றி கூறிய பிரபாஸ்! ஏன் தெரியுமா? 

  • IndiaGlitz, [Tuesday,August 06 2019]

பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பணிகள் தாமதம் ஆனதால் இரண்டு வாரங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 30-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே ஆகஸ்ட் 30ஆம் தேதி சூர்யாவின் 'காப்பான்' உள்பட ஒரு சில தென்னிந்திய மொழிப் படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததால் 'சாஹோ' படக்குழுவினர் சூர்யாவின் 'காப்பான்' படக்குழு உள்பட ஒருசில படங்களில் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் படத்தை இரண்டு வாரங்கள் ரிலீஸ் தள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்தனர்

'சாஹோ' படக்குழுவினர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட 'காப்பான்' படக்குழுவினர் உள்பட ஒருசில படக் குழுவினர் தங்களது படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இதில் 'காப்பான்' செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதனனயடுத்து பிரபாஸ் உள்பட 'சாஹோ' படக்குழுவினர் சூர்யாவுக்கு தெரிவித்துள்ளனர்,

இதுகுறித்து பிரபாஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எங்களின் வேண்டுகோளை ஏற்று ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த 'காப்பான்' படக்குழு உள்பட அனைத்து படக் குழுவினருக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள 'சாஹோ' திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.