வினோத்கண்ணா மறைவால் பாகுபலி 2' பட ரிலீஸில் மாற்றம்?

  • IndiaGlitz, [Thursday,April 27 2017]

பழம்பெரும் பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான வினோத்கண்ணா இன்று காலமானார். அவருடைய மறைவு பாலிவுட் திரையுலகினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'பாகுபலி 2' படத்தின் பிரத்யேக காட்சி ஒன்று இன்று மாலை பிரபலங்களுக்காக மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை 'பாகுபலி 2' இந்தி உரிமையை கைப்பற்றியுள்ள கரண்ஜோகர் செய்திருந்த நிலையில் இன்றைய காட்சியை அவர் ரத்து செய்தார்.

இதுகுறித்து கரண்ஜோகர் கூறியபோது, "அன்புக்குரிய வினோத் கண்ணா அவர்களின் மறைவு எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மறைவு எங்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியே. அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாகுபலி 2-ம் பாகத்தின் பிரத்யேக காட்சி ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய 'பாகுபலி 2' திரைப்படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் அனைத்து நகரங்களை போலவே நாளைதான் மும்பையிலும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மே-1, அஜித் பிறந்த நாளில் 'விவேகம்' படக்குழுவினர்களின் விருந்து

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது...

துப்புரவு பணியாளர்களுக்கு 'பாகுபலி 2' பட டிக்கெட்டுக்களை கொடுத்த கலெக்டர்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் வெளிநாடுகளில் இந்த படத்தின் முதல் காட்சி தொடங்கவுள்ள நிலையில் கட்டப்பா ரகசியம் வெகுவிரைவில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

மகாபாரதத்துடன் கனெக்சன் ஆன அஜித்தின் 'விவேகம்'

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடைபெற்று வருகிறது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜித் பிறந்த நாளுக்கு முன் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

பிரபல பாலிவுட் நடிகர் -அரசியல்வாதி திடீர் மரணம்

பாலிவுட்டின் பிரபல நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி வினோத்கண்ணா சற்று முன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70...

புதிய ரூபாய் நோட்டுக்களில் நோட்டுக்களில் எழுதியிருந்தால் செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்

புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்களில் பேனா அல்லது பென்சிலால் ஏதாவது எழுதியிருந்தாலோ அல்லது கிறுக்கியிருந்தாலோ அந்த நோட்டு செல்லாது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சற்று முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது....