close
Choose your channels

'கிஸ் பண்ண ஒருத்தன் பிறந்துதான் வரணும்': ராதே ஷ்யாம் காதலர் தின வீடியோ!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ’ராதேஷ்யாம்’ திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் காதலர்தின சிறப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் ‘என்னை கிஸ் பண்ண ஒருத்தன் பிறந்துதான் வரணும் என்ற பூஜா ஹெக்டே பேசும் வசனம் இடம்பெற்ற நிலையில் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், ஜெகபதிபாபு உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு தமிழில் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் கம்போஸ் செய்ய, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளுக்கு தமன் பின்னணி இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment