ரூ.500 கோடி பட்ஜெட் 3டி படத்தில் பிரபாஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் நடிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் ஓம் ராட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆதிபுருஷ்’ ராமாயணம் கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்பது குறிப்பிடதக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரபாஸ் நடித்து முடித்திருக்கும் மற்றொரு பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படமான ’ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Adipurush
— Om Raut (@omraut) March 1, 2022
Worldwide Theatrical Release in 3D on 12th Jan 2023.#Prabhas #SaifAliKhan @kritisanon @mesunnysingh #BhushanKumar #KrishanKumar @vfxwaala @rajeshnair06 @TSeries @RETROPHILES1 #ShivChanana #TSeries pic.twitter.com/ozGRZPRiQR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments