ஒரே படத்தில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார்.. முக்கிய கேரக்டரில் காஜல் அகர்வால்..!

  • IndiaGlitz, [Monday,May 20 2024]

ஒரே திரைப்படத்தில் தென்னிந்திய பிரபலங்களான பிரபாஸ், மோகன்லால் , சரத்குமார், மோகன் பாபு ஆகியோர் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமாரும் இந்த படத்தில் இணைகிறார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு தயாரிக்க இருக்கும் திரைப்படம் ’கண்ணப்பா’. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற உள்ளது என்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் - இந்திய திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் தென்னிந்திய பிரபலங்களான பிரபாஸ், மோகன்லால், சரத்குமார் மற்றும் மோகன் பாபு மற்றும் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடிக்கின்றனர். முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் இணைந்து உள்ளதாகவும், இன்னும் சில பிரபல நடிகைகளும் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு ‘கோஸ்ட்டி’, ‘கருங்கல்பாளையம்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் உருவான ’இந்தியன் 2’ என்ற தமிழ்ப்படமும் இரண்டு தெலுங்கு படங்களும் வெளியாகவுள்ளன. இந்த நிலையில் தற்போது விஷ்ணு மஞ்சு தயாரிக்கும் ’கண்ணப்பா’ திரைப்படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

இந்த 3 நடிகர்களுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் எனக்கு திருமணம்.. விஷால் பேட்டி..!

நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயது ஆகும் நிலையில் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் தான் திருமணம்

'குக் வித் கோமாளி' இர்பான் வைத்த பார்ட்டியில் பிக்பாஸ் மாயா.. சட்டவிரோத செயலை செய்தாரா?

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் இர்பான் துபாயில் வைத்த ஒரு பார்ட்டியில் பிக்பாஸ் மாயா கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த  பார்ட்டியில்

தமிழக மக்களுக்கு மேலும் ஒரு இலவச சேவை.. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் பிறப்பித்த உத்தரவு..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் சார்பாக பல இலவச சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்.. இன்னொரு மாஸ் அப்டேட்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2 ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள்

'தக்லைஃப்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்த 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும்,