close
Choose your channels

'மானிட உருவத்தில் வாழ்ந்த கடவுள்: பிரபாஸின் 'ஆதி புருஷ்' டிரைலர்..!

Tuesday, May 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடித்து வரும் ‘ஆதி புருஷ்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. உலகம் முழுதும் இந்த ட்ரெய்லரை 70 நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சற்றுமுன் ‘ஆதி புருஷ்’ டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சுமார் மூன்று நிமிடங்களுக்கும் அதிகமான ரன்னிங் டைமில் இருக்கும் இந்த ட்ரெய்லரில் ராமாயண கதை அம்சத்தை கச்சிதமாக வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் படமாக்கியுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

ராமர் கேரக்டரில் பிரபாஸ், சீதை கேரக்டரில் கீர்த்தி சனான், ராவணன் கேரக்டரில் சையத் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் ரௌட் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

ஏற்கனவே ராமாயணம் குறித்த பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் தற்போதைய லேட்டஸ்ட் டெக்னாலஜியின் அடிப்படையில் வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படம் உருவாகி இருப்பதால் இந்த படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஜூன் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment