பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர்.. செம்ம த்ரில்லர் படமா?

  • IndiaGlitz, [Wednesday,October 23 2024]

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறி உள்ள நிலையில், அவர் தற்போது சில பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் பட்ஜெட் மட்டும் 2000 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று ராஜா சாப். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரபாஸ் ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருக்கும் இந்த படத்தில், நிதி அகர்வால், ரித்திக் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மாருதி இயக்கத்தில், தமன் இசையில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது. இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும்போது, இந்த படம் ஒரு செம திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று மோஷன் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சன் டிவியின் பிரபல 2ஆம் பாக தொடர் முடிவுக்கு வருகிறதா?  கிளைமாக்ஸ் படப்பிடிப்பு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல இரண்டாம் பாகம் தொடர் விரைவில் முடிவடைய இருப்பதாகவும், இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு சிக்கல் வந்தால்? விஜய்யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு உதவுவதற்காக

தமிழில் ஒரு 'பாகுபலி'யா? 'கங்குவா' படத்திற்கு பிரபலம் கொடுத்த விமர்சனம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்

திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகரை திருமணம் செய்தாரா கல்யாணி பிரியதர்ஷன்? வைரல் வீடியோ..!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே திருமணமாகி, குழந்தை இருக்கும் ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டதாக இணையதளங்களில் வைரலாகி வரும் வீடியோவை

சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்ய முன்வந்த 5 பிரபலங்கள்.. இன்று மாலை மாஸ் டிரைலர்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில், 5 மொழிகளில் 5 பிரபலங்கள் இந்த டிரைலரை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.