அடுத்தடுத்து அதிர்ச்சி: மீண்டும் விபத்தில் சிக்கிய பிரபாஸ் படக்குழு!

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ நாயகன் பிரபாஸ் நடிப்பில் ’ஆதிபுருஷ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டது என்பது படக்குழுவினர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் மற்றொரு படமான ’சலார்’ படத்தின் படக்குழுவினர்கள் விபத்தில் சிக்கி உள்ளதாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’சலார்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆந்திரா மற்றும் மும்பையில் நடந்து நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ’சலார்’ படக்குழுவினர் படப்பிடிப்பை முடித்துவிட்டு தாங்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வேன் ஒன்றில் திரும்பி சென்று கொண்டிருந்த போது இவர்கள் சென்ற வேன், திடீரென லாரி மீது மோதியதால் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படக்குழுவினர் பலர் காயமடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆதிபுருஷ் படப்பிடிப்பில் நடந்த தீவிபத்தின் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் நீங்காத நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் மேலும் ஒரு படத்தின் குழுவினர்களுக்கும் விபத்து நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது