close
Choose your channels

'ருத்ரம்மாதேவி' பேரன் கதையில் பிரபாஸ்?

Monday, February 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனுஷ்கா, அல்லுஅர்ஜூன், பிரகாஷ்ராஜ், ராணா, நித்யாமேனன் உள்பட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ருத்ரம்மாதேவி' படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போதிலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குணசேகர் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தற்போது Prataprudrudu என்ற பெயரில் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


ருத்ரம்மாதேவியின் பேரனும், தென்னிந்தியாவின் கடைசி சக்கரவர்த்தியுமான Prataprudrudu அவர்களின் கதைதான் இந்த படம் என்று கூறப்படுகிறது. அனுஷ்கா ஷெட்டி ருத்திரம்மாதேவியாக முதல் பாகத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான Prataprudrudu படத்தில் ருத்ரம்மாதேவியின் பேரனாக நடிக்க 'பாகுபலி' புகழ் பிரபாஸை இயக்குனர் குணசேகர் அணுகியதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த தகவலை குணசேகர் மறுத்துள்ளார். Prataprudrudu படத்தின் ஹீரோ குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் ஒருசில ஊடகங்களால் கிளப்பி விடப்படும் வதந்தி என்றும் இந்த படம் குறித்த அனைத்து தகவல்களையும் தன்னிடம் மட்டுமே கேட்கும்படி பத்திரிகையாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment