மருத்துவமனை செட்டை அப்படியே நன்கொடையாக கொடுத்த பிரபல நடிகரின் படக்குழு!

  • IndiaGlitz, [Tuesday,May 11 2021]

பிரபல நடிகர் ஒருவரின் படத்திற்காக மருத்துவமனையின் செட் ஒன்று போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பிற்காக போடப்பட்ட அந்த செட்டில் உள்ள பொருட்களை அப்படியே மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ராதே ஷ்யாம்’. இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றுக்காக பிரமாண்டமாக மருத்துவமனை செட் போடப்பட்டது. 50 படுக்கைகள் கொண்ட கட்டில்கள், மெத்தைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஸ்ட்ரெச்சர்கள், வென்டிலேட்டர் ஆகியவை ஒரிஜினல் ஆகவே இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்ததும் செட்டை பிரிப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது தனியார் மருத்துவமனை ஒன்றில் இருந்து வேண்டுகோள் ஒன்று வந்தது. தங்கள் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை காலியாக இல்லை என்றும் அதனால் படத்திற்காக போடப்பட்ட செட்டில் உள்ள பொருள்களை தங்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ’ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் உடனடியாக படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்டில் பொருட்களை மருத்துவமனைக்கு நன்கொடையாக அளித்தனர். இதனை அடுத்து தற்போது அந்த மருத்துவமனையில் படுக்கைக்காக காத்திருந்த நோயாளிகள் பயன் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து ’ராதே ஷ்யாம்’ படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

கொரோனா பாதித்தவர்கள் நியூஸ் பார்க்க வேண்டாம்: கொரோனாவில் இருந்து மீண்ட இயக்குனரின் பதிவு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட 'அயலான்' பட இயக்குனர் ரவிகுமார் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக கொரோனா கால தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

'இந்தியன் 2' தாமதத்திற்கு கமல்ஹாசனும் ஒரு காரணம்: நீதிமன்றத்தில் ஷங்கர் பதில் மனு

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மாபெரும் பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு இடையிடையே

3 வேளை இலவச உணவு...! அதிரடியாக துவங்கி வைத்த அமைச்சர்....!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று துவங்கி வைத்தார்.

மின் கட்டண செலுத்த கால நீட்டிப்பு...! தமிழக அரசு அதிரடி உத்தரவு.....!

மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு அதிகரித்துள்ளது.

கொரோனா  நிவாரணம் எப்பொழுது வழங்கப்படும்....? கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு...!

கொரோனா நிவாரண நிதி வரும் மே-15-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.