படப்பிடிப்புக்கு அனுமதி எதிரொலி: பிரமாண்ட படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,August 23 2020]

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா முழுவதும் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று காலை மத்திய அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது. மேலும் படப்பிடிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமிழ் திரைப்படங்கள் உள்பட அனைத்து மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதல் அறிவிப்பாக பிரபாஸ் நடிக்க இருக்கும் பிரமாண்டமான திரைப்படமான ’ராதே ஷ்யாம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த அறிவிப்பை அப்படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ’ராதா ஷ்யாம்’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாவது வாரம் நடைபெற இருப்பதாகவும் நீண்ட ஷெட்யூலில் இந்த படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், டார்லிங் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே உள்பட படக்குழுவினர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாஸ், பூஜா ஹெக்டே, பிரியதர்ஷினி, பாக்யஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தீபிகா படுகோனே உடன் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார் என்பதும், ’ஆதிபுபுருஷ்’ என்ற திரைப்படத்திலும் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.