ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா 'ராதே ஷ்யாம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Wednesday,January 26 2022]

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஓடிடி ஒன்றில் இந்த படத்தின் உரிமை குறித்த பேச்சுவார்த்தை நடந்து விட்டதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஓடிடியில் ’ ராதே ஷ்யாம்’ ரிலீசாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்தியா முழுவதும் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் ஒரே நாளில் ’ராதே ஷ்யாம்’ ரிலீசாகும் என்றும் திரையரங்குகளில் தயாரிப்பாளர் சொந்தமாக வெளியிட இருக்கிறார்கள் என்றும் இன்னொரு செய்தி கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ தகவலை சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனமோ அல்லது தயாரிப்பு நிறுவனமோ இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான திரைப்படமான ’ராதே ஷ்யாம்’ படத்தை திரையரங்குகளில் பார்த்தால் மட்டுமே திருப்தியாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் ’ராதே ஷ்யாம்’ ஓடிடியில் ரிலீசாகுமா? அல்லது பொறுமை காத்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.