close
Choose your channels

பிரபாஸின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sunday, February 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகராக மாறியவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ’ராதே ஷ்யாம்’ ‘சலார்’ மற்றும் ஆதிபுருஷ்’ ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ’ராதே ஷ்யாம்’ படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழுவினர் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இந்த படம் ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை யூவி கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் ஹிந்தி பதிப்பிற்கு மனோஜ் என்பவரும் இசையமைத்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் என்பவரும் படத்தொகுப்பாளராக வெங்கடேஸ்வர ராவ் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment