நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் பட்டையை கிளப்பும் ''ஆதிபுருஷ்' : ஒரே நாளில் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Sunday,June 18 2023]

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான ‘’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகின. மேலும் அனுமனுக்கு ஒரு இருக்கை ஒதுக்கியதையும் இணையதளத்தில் கேலி செய்யப்பட்டது

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் பல திரையரங்குகள் காலியாக இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் உலக நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது அதன் வசூலில் இருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் திரையரங்குகள் முன் பட்டாசு வெடித்து பால்குடம் ஏற்றியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் இந்த படம் மிகப்பெரிய வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திரா தெலுங்கானாவில் 39 கோடி ரூபாய், கர்நாடகாவில் 6.50 கோடி ரூபாய் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 2 கோடி ரூபாய் இந்தியாவின் மற்ற பகுதிகளில் 40.50 கோடி ரூபாய் மொத்தத்தில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 88 கோடி வசூல் ஆகியுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல், மியூசிக் உரிமைகள் மூலம் உருவாக ரூபாய் 247 கோடி வசூல் வந்ததாக கூறப்படுகிறது. மொத்தத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி மிகப்பெரிய வசூலை ‘ஆதிபுருஷ்’ குவித்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்