தன்னை நெகிழ வைத்த ரசிகருக்குப் பிரபல நடிகர் கொடுத்த அன்பு பரிசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கிற நடிகர் பிரபாஸ் தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு விலையுயர்ந்த கைகடிகாரத்தை பரிசாக அளித்துள்ளார். இதற்கு பின்னால் ஒரு சுவாரசியக் கதையும் இருக்கிறது.
திரைப்பிரபலங்களை கொண்டாடுவதில் ஆந்திர மக்கள் எப்போதும் ஒருபடி மேலேதான் இருக்கின்றனர். ஒருகாலத்தில் என்.டி.ராமராவை அவர்கள் தெய்வத்திற்கு இணையாகவே போற்றிவந்தனர். தற்போது இளம் ரசிகர்கள் தங்களுடைய ஆஸ்தான நாயகர்களை வேறுவகையில் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் ஒருவர் தன்னுடைய தலையில் பிரபாஸ் என்ற பெயரை பொறித்து இருக்கிறார். இதுகுறித்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில் இது நடிகர் பிரபாஸை ஈர்த்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அந்த ரசிகரை நேரில் அழைத்த பிரபாஸ் அவரைப் பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
மேலும் விலையுயர்ந்த கைகடிகாரம் ஒன்றையும் தனது ரசிகருக்குப் பரிசாக வழங்கியுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்துவரும் நடிகர் பிரபாஸ் “பாகுபலி“ வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறார். இதனால் அவர் நடிக்கும் சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் பான் இந்தியா திரைப்படங்களாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் “ராதே ஷ்யாம்“, “சலார்“, “ஆதிரூபன்“ போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் “ராதே ஷ்யாம்“ படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் கடிதம் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments