தன்னை நெகிழ வைத்த ரசிகருக்குப் பிரபல நடிகர் கொடுத்த அன்பு பரிசு!

  • IndiaGlitz, [Friday,November 19 2021]

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கிற நடிகர் பிரபாஸ் தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு விலையுயர்ந்த கைகடிகாரத்தை பரிசாக அளித்துள்ளார். இதற்கு பின்னால் ஒரு சுவாரசியக் கதையும் இருக்கிறது.

திரைப்பிரபலங்களை கொண்டாடுவதில் ஆந்திர மக்கள் எப்போதும் ஒருபடி மேலேதான் இருக்கின்றனர். ஒருகாலத்தில் என்.டி.ராமராவை அவர்கள் தெய்வத்திற்கு இணையாகவே போற்றிவந்தனர். தற்போது இளம் ரசிகர்கள் தங்களுடைய ஆஸ்தான நாயகர்களை வேறுவகையில் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் ஒருவர் தன்னுடைய தலையில் பிரபாஸ் என்ற பெயரை பொறித்து இருக்கிறார். இதுகுறித்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில் இது நடிகர் பிரபாஸை ஈர்த்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அந்த ரசிகரை நேரில் அழைத்த பிரபாஸ் அவரைப் பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் விலையுயர்ந்த கைகடிகாரம் ஒன்றையும் தனது ரசிகருக்குப் பரிசாக வழங்கியுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்துவரும் நடிகர் பிரபாஸ் “பாகுபலி“ வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறார். இதனால் அவர் நடிக்கும் சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் பான் இந்தியா திரைப்படங்களாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் “ராதே ஷ்யாம்“, “சலார்“, “ஆதிரூபன்“ போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் “ராதே ஷ்யாம்“ படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் கடிதம் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

ஜப்பான் மாடலில் நவீன வசதி… அசத்தும் ரயில்வே நிர்வாகம்!

பயணிகள் ஓய்வெடுக்க கேப்ஸ்யூல் ஓட்டல் எனப்படும் சிறிய பாட் அறையை மும்பை ரயில்வே நிர்வாகம் வடிவமைத்துள்ளது.

கேரள அழகிகள் மரணத்தில் திடீர் திருப்பம்… 6 பேர் கைது, தொடரும் மர்மம்!

கார் விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட கேரள அழகிகள் வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும்

சென்னை உள்பட 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது

ஓபன் சட்டையில் கேஷுவல் மேக்கப்… படு கிளாமர் புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகை!

நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் “ஏஞ்சல்“ திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் நடிகை பாயல் ராஜ்புத்.

வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைக்கு தாயான பிரபல பாலிவுட் நடிகை!

பாலிவுட் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொடிக்கட்டி பறந்துவரும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் பஞ்சாப்