அந்த நடிகை பெரிய சூப்பர் ஸ்டார்? நடிகர் பிரபாஸ் யாரை கொண்டாடுகிறார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது பான் இந்தியா திரைப்படங்கள் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பிரபல நடிகராக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகர் பிரபாஸ் தன்னுடைய திரைப்படத்தில் நடித்துவரும் சக நடிகை ஒருவரை பெரிய சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கும் தகவல் ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கில் ‘பாகுபலி’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ராதேஷ்யாம்’ போன்ற திரைப்படங்கள் நடித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் கொண்டிருக்கும் நடிகர் பிரபாஸ் தற்போது ‘ப்ராஜெக்ட் கே‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.
அறிவியல் புனைகதையாக அமைய இருக்கும் இந்தப் படத்தில் பிரபாஸுடன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் பசுபதி, திஷா பதானி ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நிலையில் படக்குழு சமீபத்தில் இந்தத் திரைப்படத்திற்கு ‘கல்கி 2898 கி.பி’ எனப் பெயர் வைத்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் 12 ஜனவரி 2024 இல் வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ‘கல்கி 2898 கி.பி’ திரைப்படத்தின் கிளிம்பிங்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ள நிலையில் படம் வெளியாகும்போது அவரது கேரக்டர் பெரிய வரவேற்பை பெறும் என்றும் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக நடிகர் பிரபாஸ்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு ‘அவர் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். மிக அழகான பெண்மணி. அவர் ஏற்கனவே உலகளவில் பிரபலமானவர். அவர் லூயிஸ் உய்ட்டன், டாம் அடெக்ஸ் மற்றும் மிகப்பெரிய சர்வதேச விளம்பரங்களில் நடிக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் செட்டுக்குள் வரும்போது துடிப்பாக இருப்பார். நான் அவரை எப்போதும் விரும்பினேன். அவருடன் வேலை செய்ய நினைத்தேன். ஆனால் இதுவே முதல் முறை‘ என்று நடிகர் பிரபாஸ் பதிலளித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை தீபிகா படுகோன் முன்னதாக ‘பதான்’ திரைப்படத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து ‘கல்கி’ திரைப்படத்திலும் ‘ஃபைட்டர்’ திரைப்படத்திலும் நடித்துவரும் நிலையில் நடிகர் பிரபாஸ் அவரை பெரிய சூப்பர் ஸ்டார் என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது.
வைஜெயந்தி மூவிஸ் சார்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகிவரும் ‘கல்கி 2898 கி.பி’ திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்தில் எடிட்டராக கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், ஒளிப்பதிவாளராக டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிக் ஆகியோர் பணியாற்ற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments