அந்த நடிகை பெரிய சூப்பர் ஸ்டார்? நடிகர் பிரபாஸ் யாரை கொண்டாடுகிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,August 03 2023]

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது பான் இந்தியா திரைப்படங்கள் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பிரபல நடிகராக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகர் பிரபாஸ் தன்னுடைய திரைப்படத்தில் நடித்துவரும் சக நடிகை ஒருவரை பெரிய சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கும் தகவல் ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கில் ‘பாகுபலி’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ராதேஷ்யாம்’ போன்ற திரைப்படங்கள் நடித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் கொண்டிருக்கும் நடிகர் பிரபாஸ் தற்போது ‘ப்ராஜெக்ட் கே‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.

அறிவியல் புனைகதையாக அமைய இருக்கும் இந்தப் படத்தில் பிரபாஸுடன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் பசுபதி, திஷா பதானி ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நிலையில் படக்குழு சமீபத்தில் இந்தத் திரைப்படத்திற்கு ‘கல்கி 2898 கி.பி’ எனப் பெயர் வைத்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் 12 ஜனவரி 2024 இல் வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ‘கல்கி 2898 கி.பி’ திரைப்படத்தின் கிளிம்பிங்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ள நிலையில் படம் வெளியாகும்போது அவரது கேரக்டர் பெரிய வரவேற்பை பெறும் என்றும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக நடிகர் பிரபாஸ்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு ‘அவர் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். மிக அழகான பெண்மணி. அவர் ஏற்கனவே உலகளவில் பிரபலமானவர். அவர் லூயிஸ் உய்ட்டன், டாம் அடெக்ஸ் மற்றும் மிகப்பெரிய சர்வதேச விளம்பரங்களில் நடிக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் செட்டுக்குள் வரும்போது துடிப்பாக இருப்பார். நான் அவரை எப்போதும் விரும்பினேன். அவருடன் வேலை செய்ய நினைத்தேன். ஆனால் இதுவே முதல் முறை‘ என்று நடிகர் பிரபாஸ் பதிலளித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை தீபிகா படுகோன் முன்னதாக ‘பதான்’ திரைப்படத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து ‘கல்கி’ திரைப்படத்திலும் ‘ஃபைட்டர்’ திரைப்படத்திலும் நடித்துவரும் நிலையில் நடிகர் பிரபாஸ் அவரை பெரிய சூப்பர் ஸ்டார் என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது.

வைஜெயந்தி மூவிஸ் சார்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகிவரும் ‘கல்கி 2898 கி.பி’ திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்தில் எடிட்டராக கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், ஒளிப்பதிவாளராக டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிக் ஆகியோர் பணியாற்ற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நீரிழிவு நோயால் கால் துண்டிப்பு.. ரஜினி, சூர்யாவை அடுத்து விக்ரம் செய்த உதவி..!

பிரபல தயாரிப்பாளர் துரை நீரிழிவு நோய் காரணமாக கால் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில் அவருக்கு நடிகர் விக்ரம் உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

டீன் ஏஜ் சிம்ரனை பார்க்கணுமா? AI டெக்னாலஜியில் ஒரு அற்புதம்.. வைரல் புகைப்படம்..!

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகை சிம்ரன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா உட்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது தெரிந்தது. அவர் பிரபல நடிகர்களின்

'தலைவர் 170' பட லுக் இதுவா? சூப்பர் ஸ்டார் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் 'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேலு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

'நாதஸ்வரம்' சீரியல் நடிகையின் கணவர் திடீரென மரணம்.. திருமணமான ஒரே வருடத்தில் ஏற்பட்ட சோகம்..!

'நாதஸ்வரம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிலையில் இருந்து வடியும் ரத்தக்கண்ணீர்.. அருள்நிதியின் 'டிமாண்டி காலனி 2' மிரட்டும் மோஷன் போஸ்டர்..!

அருள்நிதி நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின்