தமிழ், தெலுங்கில் தீபிகா படுகோனே படம்: பூஜையுடன் இன்று ஆரம்பம்!

  • IndiaGlitz, [Saturday,July 24 2021]

தமிழ், தெலுங்கு உள்பட பான் - இந்தியா படமாக உருவாகவிருக்கும் திரைப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார் என்றும், இந்த படத்தின் பூஜை இன்று நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் தீபிகா படுகோனே நடிக்கும் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் ஒன்றை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிரபாஸ், தீபிகா படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குவதாகவும் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிகளில் தயாராக உள்ளது. முதல்முறையாக பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பதால் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும், இந்த படம் அடுத்தாண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல யூடியபர்-க்கு பதிலளித்த எலன் மஸ்க்.....! இறக்குமதி வரி அதிகமாக உள்ளது என ட்வீட்....!

தமிழ் யுடியூபர் மதன்கௌரியின் ட்வீட்டிற்கு, எலன் மஸ்க்-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்து பதில் கூறப்பட்டுள்ளது.

தங்கத்தைவிட காஸ்ட்லியான ஐஸ் க்ரீம்? அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

உலகத்திலேயே விலையுயர்ந்த ஐஸ் க்ரீமை துபாயில் உள்ள ஒரு உணவகம் ஒன்று தயாரித்து விற்பனை செய்கிறது.

'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்த 'அர்ஜுன் ரெட்டி' என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் தமிழிலும் 'ஆதித்யவர்மா' என்ற பெயரில் ரீமேக்

இயக்குனர் குடும்பத்திற்கு வரும் பிரபல நடிகரை வரவேற்ற ஏ.ஆர்.முருகதாஸ்!

தமிழ் திரையுலகில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் ஆகியோர் இயக்குனர்களாக கடந்த சில ஆண்டுகளில் மாறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

எமனாக மாறும் Chair சிட்டிங்? தப்பித்துக் கொள்ள எளிய டிப்ஸ்!

நீண்ட ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன், அடிவயிற்றில் கொழுப்பு, நீரிழிவு, இதயநோய் முதற்கொண்டு புற்றுநோய் வரை பல உடல்பாதைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.