நேற்று பிரபாஸ்.. இன்று அனுஷ்கா.. அடுத்தடுத்து வெளியான திருமண தகவல்கள்..!

  • IndiaGlitz, [Saturday,May 18 2024]

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் விரைவில் தன்னுடைய வாழ்வில் ஒரு புது உறவு ஏற்பட போவதாக பதிவு செய்த நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றும் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிரபாஸ் திருமண தகவல் வெளியான நிலையில் தற்போது அனுஷ்காவின் திருமண தகவல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளின் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா ஷெட்டி என்பதும் விஜய், அஜித், சூர்யா, சிம்பு உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 42 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் அனுஷ்கா ஷெட்டி விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அவர் பிரபல கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸை காதலிப்பதாகவும், தெலுங்கு இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ய போவதாகவும் வதந்திகள் பரவிய நிலையில் இந்த தகவலாவது உண்மையாக இருக்குமா? அல்லது வதந்தியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

More News

எனக்கே இது புது செய்தி.. 'மோடி' வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது குறித்து சத்யராஜ்..!

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படம் பாலிவுட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் மோடி கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும்

10,000 போர்வீரர்களுடன் ஒரு போர்க்காட்சி.. 'பாகுபலி'யை மிஞ்சிவிடுமா தமிழ் திரைப்படம்?

ஹாலிவுட்டில் ஏராளமான போர் வீரர்களை வைத்து பெரும் பொருட்செலவில் போர் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவை பொறுத்த வரை போர் காட்சிகள் என்றால்

மீண்டும் இணையும் ராபர்ட் - வனிதா.. ஜோவிகாவுக்கு என்ன வேலை?

நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் ஆகிய இருவரும் சேர்ந்து சில ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

செல்ல மகளுக்கு கிடைத்த பட்டம்.. பெருமையுடன் பதிவு செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்..!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது செல்ல மகளுக்கு கிடைத்த பட்டம் குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை.. சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி இவரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் அவரை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை, சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க