நேற்று பிரபாஸ்.. இன்று அனுஷ்கா.. அடுத்தடுத்து வெளியான திருமண தகவல்கள்..!

  • IndiaGlitz, [Saturday,May 18 2024]

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் விரைவில் தன்னுடைய வாழ்வில் ஒரு புது உறவு ஏற்பட போவதாக பதிவு செய்த நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றும் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிரபாஸ் திருமண தகவல் வெளியான நிலையில் தற்போது அனுஷ்காவின் திருமண தகவல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளின் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா ஷெட்டி என்பதும் விஜய், அஜித், சூர்யா, சிம்பு உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 42 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் அனுஷ்கா ஷெட்டி விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அவர் பிரபல கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸை காதலிப்பதாகவும், தெலுங்கு இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ய போவதாகவும் வதந்திகள் பரவிய நிலையில் இந்த தகவலாவது உண்மையாக இருக்குமா? அல்லது வதந்தியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.