மீண்டும் இணையும் பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி: இயக்குனர் யார் தெரியுமா? 

  • IndiaGlitz, [Wednesday,March 30 2022]

தெலுங்கில் வெளியான ’பில்லா’ திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் ஏற்கனவே பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்திருந்தாலும் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் பிரபாஸ்- அனுஷ்காவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்பதும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தெலுங்கு திரையுலக இயக்குனர் மாருதி இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் - அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வெற்றி பட ஜோடி பிரபாஸ் - அனுஷ்கா மீண்டும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

'வலிமை' நடிகருக்கு திருமணம்: கேரள பெண்ணை கைப்பிடித்தார்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தில் நடித்த நடிகருக்கு திருமணம் முடிந்ததை அடுத்து ரசிகர்கள் அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

சூர்யா-பாலா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸா?

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் கன்னியாகுமரி அருகே இந்த படத்தின் முதல்கட்ட

விக்ரம் - பா ரஞ்சித் திரைப்படத்தின் டைட்டில் இதுவா? படப்பிடிப்பு எப்போது?

விக்ரம் நடித்த 'மஹான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'துருவ நட்சத்திரம்'

பணத்தை எடுத்து கொண்டு கிளம்புகிறாரா ஜூலி? எத்தனை லட்சம் தெரியுமா?

பிக் பாஸ் ஜூலி பணத்தை எடுத்துக்கொண்டு அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மொயீன் அலி கம் பேக்: அதிரடி காட்ட சிஎஸ்கே தயார்

ஐபிஎல் 2022 சீசனின் 7வது போட்டியில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும், மார்ச் 31ம் தேதியும் பிரபோர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.