அரசாங்கத்திற்கு விரோதமான காட்சி தவறுதான். சர்க்கார் விவகாரம் குறித்து பவர் ஸ்டார்

  • IndiaGlitz, [Monday,November 12 2018]

சர்க்கார் விவகாரம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது:

சர்க்கார் படத்திற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே சில காட்சிகளை நீக்க வேண்டும் என்பதே எனது கருத்து. படமெடுப்பது மக்களை மகிழ்விப்பதற்குதான். எனவே இதுபோன்ற காட்சிகளை வைத்தது தவறு என்பதுதான் எனது கருத்து. யாராக இருந்தாலும் அரசாங்கத்திற்கு விரோதமான காட்சியமைப்புகளை செய்யக்கூடாது.

கதைத்திருட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 'கதை திருட்டு என்பது இன்று நேற்றல்ல காலம் காலமாக இருக்கும் பிரச்னைதான். ஆனாலும் இது மிகவும் தவறு. சிரமப்பட்டு ஒருவர் சொல்லும் கதையை அவருக்கு தெரியாமல் படமாக எடுப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு சில இயக்குனர்கள் செய்யும் தவறால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் களங்கப்படுகிறது.