அரசியல் செய்யாமல் ஆட்சி செய்கிறீர்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் பாராட்டு!

அரசியல் செய்யாமல் ஆட்சி செய்கிறீர்கள் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பிரபல நடிகர் ஒருவர் பாராட்டு தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் என்பதும் அது முதல் தமிழகம் பல்வேறு வளர்ச்சி பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் அதிரடி அறிவிப்புகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது என்பதும் தமிழக முதல்வரின் ஆட்சியை ஒருசில எதிர்க்கட்சிகள் தலைவர்களே பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மற்றும் பவர்ஸ்டார் பவன் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வரின் ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்திருக்கும் டுவிட்டில் குறிப்பிட்டுள்ளதாவது: அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம் உங்கள் அரசின் செயல்பாடுகள் உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்

பவர்ஸ்டார் பவன்கல்யாண் அவர்களின் இந்த ட்வீட் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், அவரது ரசிகர்கள் இந்த டுவிட்டை இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.