கொரோனாவால் பாதிப்பு அடைந்த பவர்ஸ்டார்: மருத்துவமனையில் அனுமதி
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர்ஸ்டார் பவன்கல்யாண் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
பவன் கல்யாண் நடிப்பில் உருவான ’வக்கீல் சாகேப்’ என்ற திரைப்படம் சமீபத்தில் தெலுங்கு மாநிலங்களில் வெளியானது. தமிழில் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் அவரது ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வக்கீல் சாகேப்’ திரைப்படம் வெளியாகி ஒரு சில நாட்களில் பவன் கல்யாண் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே வக்கீல் சாகேப் பட குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது என்பதும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
Powerstar Pawan Kalyan tested positive, condition stable. pic.twitter.com/mHZGEVvTJv
— Vamsi Kaka (@vamsikaka) April 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com