close
Choose your channels

5 நிமிடத்தில் ஓகே சொல்லிவிட்டேன்.. பவர்ஸ்டார் படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

Tuesday, June 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்து முடித்த ஐந்தே நிமிடத்தில் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் என்பது அறிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது நடிக்க இருக்கும் திரைப்படம் 'OG’. பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ என்ற படத்தை இயக்கிய சுஜித் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

பவர் ஸ்டார் பவன் கல்யாண், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். தமன் இசையில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் படப்பிடிப்புக்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நடிகை ஸ்ரேயா ரெட்டி இணைந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ’ஸ்கிரிப்ட்டை படித்து முடித்து ஐந்தாவது நிமிடம் இந்த படத்தில் நடிக்க நான் ஓகே சொல்லிவிட்டேன். இதுதான் எனது கேரக்டர் பவர். சுஜித் அந்த கேரக்டரை மிகவும் அழகாக எழுதியிருந்தார்.

பவன் கல்யாண் அவர்கள் மிகவும் அற்புதமான மனிதர், அவருடன் பணிபுரிய எனக்கு தனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. சுஜித் ஒரு நல்ல இயக்குனர், எப்போதும் இனிமையானவர், மனதை கவரும் ஸ்கிரிப்டை எழுதியிருந்த அவருடன் பணிபுரிவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment