5 நிமிடத்தில் ஓகே சொல்லிவிட்டேன்.. பவர்ஸ்டார் படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Tuesday,June 13 2023]

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்து முடித்த ஐந்தே நிமிடத்தில் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் என்பது அறிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது நடிக்க இருக்கும் திரைப்படம் 'OG’. பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ என்ற படத்தை இயக்கிய சுஜித் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

பவர் ஸ்டார் பவன் கல்யாண், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். தமன் இசையில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் படப்பிடிப்புக்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நடிகை ஸ்ரேயா ரெட்டி இணைந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ’ஸ்கிரிப்ட்டை படித்து முடித்து ஐந்தாவது நிமிடம் இந்த படத்தில் நடிக்க நான் ஓகே சொல்லிவிட்டேன். இதுதான் எனது கேரக்டர் பவர். சுஜித் அந்த கேரக்டரை மிகவும் அழகாக எழுதியிருந்தார்.

பவன் கல்யாண் அவர்கள் மிகவும் அற்புதமான மனிதர், அவருடன் பணிபுரிய எனக்கு தனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. சுஜித் ஒரு நல்ல இயக்குனர், எப்போதும் இனிமையானவர், மனதை கவரும் ஸ்கிரிப்டை எழுதியிருந்த அவருடன் பணிபுரிவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.

More News

மும்பை கடற்கரையில் வீடு வாங்கிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள்… விலை தெரியுமா?

பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்துவரும் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் தம்பதிகள் மும்பை கடற்கரையை ஒட்டி புதிதாக உருவாகிவரும்

அம்மா, அப்பா, அக்கா, தம்பி.. குடும்பத்துடன் திஷா பதானியின் கொண்டாட்டம்.. என்ன விசேஷம்?

 சூர்யாவின் 'கங்குவா' திரைப்படத்தில் நாயகி ஆக நடித்து வரும்  திஷா பதானி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய

பள்ளி தோழியுடன் நிச்சயதார்த்தம்… வைரலாகும் சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ் பாண்டே புகைப்படங்கள்

ஐபிஎல் 16 ஆவது சீசன் போட்டி முடிந்தவுடனே பல இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து வருகின்றனர்

தமன்னாவின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்.. குவியும் லைக்ஸ், கமெண்ட்ஸ்..!

 திரை உலகில் மார்க்கெட் போன நடிகைகள் மீண்டும் வாய்ப்புகள் பெற இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருவார்கள். ஆனால் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக

மகாநதி சங்கரின் மகள்களா இவர்கள்? க்யூட் புகைப்படங்கள்..!

நடிகர் மகாநதி சங்கரின் மனைவி, மகள்கள் மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து