மீண்டும் 'பிங்க்' ரீமேக்: அமிதாப் வேடத்தில் பவர்ஸ்டார்

  • IndiaGlitz, [Saturday,September 21 2019]

அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்த சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படமான ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார் என்பதும் ‘நேர் கொண்ட பார்வை’ என்ற டைட்டிலில் வெளியான இந்த படம் தமிழிலும் சூப்பர்ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ‘பிங்க்’ படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்து இந்த படத்தில் அமிதாப் வேடத்தில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தெலுங்கு திரையுலகில் பவர்ஸ்டாருக்கு என மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் இந்த படம் இந்தி, தமிழை அடுத்து தெலுங்கிலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பவன்கல்யாண் நடிக்கவிருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடித்த ‘வீரம்’படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது