நீங்கள் நினைப்பதை விட உங்கள் ஆழ்மனம் (Subconsious) மிகவும் புத்திசாலி தெரியுமா உங்களுக்கு
Send us your feedback to audioarticles@vaarta.com
மனிதனின் மன அடுக்குகளை உளவியல் அறிஞர்கள் பொதுவாக மூன்று நிலைகளில் பாகுபடுத்துகின்றனர். நனவு மனம் (Consious), நனவிலி மனம் (Unconsious), ஆழ்மனம் (Subconsious) என்று மனித மனம் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. நனவு மனதினை விட (அதாவது இயல்பாக நிலையில் உள்ள மனம்) ஆழ்மனம் மிகவும் முக்கியத்துவமுடையதாக உளவியல் மருத்துவர்களால் கருதப்படுகிறது. காரணம் மனிதனின் ஆழ்மனம் அவனது நினைவுகளில் சேகரிக்கப்படுகின்ற தரவுகளையும் அவனது நிறைவேறாத ஆசைகளையும் தன்னுள் தேக்கிவைத்துக்கொள்கிறது. இவ்வாறு தேக்கி வைக்கப்படுகின்ற உணர்வுகள், கனவுகள், ஆசைகள், நிகழ்வுகள் அனைத்தும் அவ்வபோது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று உளவியல் மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
உளவியல் பேரறிஞரான சிக்மண்ட் ஃப்ராட் முதன் முதலாக இந்த ஆழ்மனத்தின் (Subconsious) செயல்பாடுகளைக் குறித்து பரிசோதனை செய்தார். மனிதனது ஆழ்மனம் விருப்ப நிறைவேற்றக் கருவியாகச் செயல்படுகிறது எனத் தனது முடிவினையும் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து மருத்துவ உலகில் உளவியல் மருத்துவர்கள் மனிதனது அழ்மனத்தின் செயல்பாடுகளைக் குறித்து அலசத் தொடங்கினர். மனிதனது ஆழ்மனத்தின் தரவுகளே ஒருவரது மனஅழுத்தத்திற்கும் மன மகிழ்ச்சிக்கும் காரணமாகிறது.
நாம் மனிதனின் எண்ணங்களைக் குறித்து நம் முழுவதுமாக அறிந்துகொண்டுள்ளோம் என்று அறிவியல் உலகம் நம்புகிறது. ஆனால் உண்மையில் மனிதனது எண்ணங்களைக் குறித்தும் செயல்பாடுகளைக் குறித்தும் முழுவதுமாக உணர்ந்து கொள்வதில் சிக்கல்கள் ஏற்படவும் செய்கின்றன. இதுபோன்ற நேரங்களில் உளவியல் மருத்துவர்கள் மனிதனது சிந்தனையைக் குறித்து ஆய்வு செய்ய முற்படுகின்றனர்.
நனவு மனது (அதாவது இயல்பு வாழ்க்கையின்) பாதிப்புகளாகவோ, மகிழ்ச்சியாகவோ, எதிர்ப்பார்புகளாகவோ பல எண்ணங்களை நம்முள் தேக்கி வைத்துக்கொள்கிறது. பல நேரங்களில் கிடைக்கப்பெறாத விருப்பங்களையும் அடுக்கடுக்காகத் தேக்கி வைத்துக்கொள்கிறது. இந்த விருப்ப நிறைவேங்கள்தான் ஆழ்மனத்தின் பாதிப்புகளால் அவ்வபோது நம்மை அறியாமல் நம்மிடம் இருந்து வெளிப்படுகின்றன. இத்தகைய ஆய்வுகள் மனிதனது ஆழ்மனம் வலிமை வாய்ந்தது என நீருபணம் செய்வதற்கு மட்டுமல்லாது மனிதனின் ஆசைகளையும் விருப்பங்களையும் அறிந்துகொள்வதற்காகவும் உளவியல் சிகிச்கைகளில் பயன்படுகின்றன.
மனிதனது ஆழ்மனதில் அவனது நிறைவேறாத ஆசைகள், குழந்தைப்பருவத்தில் பூர்த்தியாகாத உணவு கூட தரவுகளாகச் சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றன. குழந்தைப் பருவத்தில் பூர்த்தியாகாத உணவு (தாய்ப்பால்) கூட வளர்ந்த பின்பு அவனது மன அழுத்தத்திற்கும் நடத்தைகளுக்கும் காரணங்களாக மாறிவிடுகின்றன. இத்தகைய நடத்தை முறைகள் சமூக ஒழுங்கீனங்களுக்கும் வழிவகுக்கும் எனவும் உளவியல் மருத்துவர்கள் முடிவுகூறுகின்றனர்.
சாதாரண செயல்பாடுகளில் மனிதனது ஆழ்மனம் செயல்படும் விதம்
மனிதனது மனதை நன்று அறிந்து வைத்திருப்பதாகப் பொதுவாக நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த நம்பிக்கை பெரும்பாலும் பொய்யாகிவிடுகிறது.
மனிதனது மூளையானது புதிர்களைக் கண்டுபிடிக்க முற்படும்போது, சொற்களைப் படிக்கும் போது நமது கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் நடைபயிற்சி செய்யும் பொழுது, மற்றவர்களுடன் பேசும்போது நம் நனவு மனத்தினைத் தாண்டி வேறு எண்ணங்களும் நமது சிந்தனைக்குள் தோன்றுவதைப் பார்க்க முடிகிறது.
உடல்நிலை குறைவு ஏற்படும்போது நம்மால் முடியாது என்று நினைக்கின்ற செயல்களைக்கூட மிக எளிதாக நம்மையறியாமல் செய்து விடுவதைப் பார்க்க முடிகிறது. கைகளில் அடிப்பட்டு தூக்க முடியாமல் கிடக்கும் நோயாளி கூட அவருக்குத் திடீரென்று ஆபத்து வருகிற சமயத்தில் தன்னை அறியாமல் தன்னைக் காத்துக் கொள்கிறார். இத்தகைய செயல்பாடுகள் அனிச்சையாக நடைபெறுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுவர். அனிச்சை செயல்களைத் தாண்டியும் இங்கு செய்ய முடியாத காரியம் ஒன்று செய்யப்படுகிறது.
ஒருவர் மயங்கிக் கிடக்கும்போது அவரிடம் பிரான்சின் தலைநகரம் எது என்று கேட்டால் அதற்கு, மயக்க நிலையினையும் தாண்டி அவருடைய சிந்தனையில் பாரிஸ் என்று பதில் வரும். சில சமயங்களில் வாய்விட்டுக் கூட அந்த நபர் தனது பதிலைக் கூறிவிடுகிறார்.
இவ்வாறு நான் எப்படி செய்தேன், எப்படி பேசினேன் என்று எனக்கே தெரியவில்லை. ஏன் நான் அவனை வெறுக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்று பலர் கூறுவதைப் பார்க்க முடியும். இத்தகைய செயல்பாடுகளுக்கு ஆழ்மனத்தில் தேக்கி வைக்கப்பட்டிருக்கின்ற தரவுகளே காரணமாக அமைந்துவிடுகின்றன. ஏதோ ஒரு நேரத்தில் சாதாரணமான தனது மகிழ்ச்சிக்குத் தடையாக இருந்த நபரைக்குறித்த நினைவுகூட தற்போதைய வாழ்க்கையில் மிகப் பெரிய எதிரியாக பாவனை செய்வதற்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது என்று மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதனது மனக்குறைகளும், விருப்பங்களும் அன்றாட வாழ்க்கையில் தலையை நீட்டி சூழ்நிலையை மாற்றி விடுகின்றன என்பதே ஆழ்மனத்தில் வலிமையாகக் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com