'பவர் ஆஃப் அஜித்குமார்': 'வலிமை' வீடியோவை வெளியிட்ட போனிகபூர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியை விறுவிறுப்பாக படக் குழுவினர் செய்து வருகின்றனர் என்பதும் அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’பவர் ஆஃப் அஜித்குமார்’ என்ற தலைப்பில் ‘வலிமை’ படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
30 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் அஜித்தின் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நாயகி ஹூமா குரேஷியின் ஆக்சன் காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோ அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது மட்டுமின்றி படத்தின் எதிர்பார்ப்பையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
Witness the Power of #AjithKumar in Cinemas all across the world #Valimai#ValimaiFromFeb24
— Boney Kapoor (@BoneyKapoor) February 16, 2022
#HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir @dhilipaction @editorvijay @DoneChannel1 pic.twitter.com/RIS8YVOcIC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com