அழகிகளை அலறவிட்ட கொரோனா… போட்டியே ஒத்திவைக்கப்பட்ட சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
2021 உலக அழகிப்போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகப் போட்டிக்குழு நேற்றிரவு தகவல் வெளியிட்டு உள்ளது. இதையடுத்து போட்டியில் கலந்துகொள்ள வந்த அனைத்து அழகிகளும் தங்களது நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் உலகஅழகிப் போட்டி கோலாகலமாக நடத்தப்படும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு உலகஅழகிப்போட்டி அமெரிக்கா தீவான ப்யூர்ட்டோ ரிக்கோவில் நடைபெறுவதாக இருந்தது. (டிசம்பர் 17) இன்று முதல் போட்டிகள் அனைத்தும் துவங்க இருந்த நிலையில் போட்டி துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு உலகஅழகிப் போட்டி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
மேலும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வந்த அழகிகள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என 17 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து உலகஅழகிப் போட்டி 2021 தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தப்போட்டிகள் 3 மாதம் கழித்து மீண்டும் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
2021 உலகஅழகிப் போட்டியில் இந்தியா சார்பாக மானசா வாரனாசி கலந்து கொள்ள இருந்தார். இவர் 2020 மிஸ் இந்தியா போட்டியில் வெற்றிப்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆண்டு உலகஅழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout