நிர்வாண பார்ட்டியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவாவில் நிர்வாண பார்ட்டி நடக்கவிருப்பதாகவும், இந்த பார்ட்டியில் இந்திய மற்றும் வெளிநாட்டு பெண்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் போஸ்டர் ஒன்று கோவாவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருசில வெளிநாடுகளில் நிர்வாண பார்ட்டி என்பது சஜகமாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியாவில் இவ்வகை பார்ட்டி நடந்ததாக தெரியவில்லை இந்த நிலையில் கோவாவின் வடக்குப் பகுதியில், நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும் இதில் 15 வெளிநாட்டு பெண்களும் 10க்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த பார்ட்டி எங்கு எப்போது நடக்க இருக்கிறது என்கிற விவரம் அந்த போஸ்டரில் இல்லை. இந்த போஸ்டர்களை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த போஸ்டர் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் ஆகியோர்களுக்கு கோவா மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் பிரதிமா கோட்டின்ஹோ கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து கோவா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வரின் உத்தரவின்பேரில் கோவா போலீசார் மாநிலம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவாவில் இதுபோன்ற நிர்வாண பார்ட்டிகளை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், போஸ்டர் ஒட்டியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவா போலீசார் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments