கேலி செய்த ஆசிரியருக்கு வெற்றியை சமர்ப்பணம் செய்த மாணவர்: போஸ்டர் அடித்து கொண்டாட்டம்!
- IndiaGlitz, [Thursday,August 13 2020]
பத்தாம் வகுப்பில் பாஸ் ஆக மாட்டேன் என்று கேலி செய்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் என்று தனது வெற்றியை போஸ்டர் அடித்து கொண்டாடிய மாணவர் ஒருவர், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளி வந்ததை அடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்ற பத்தாம் வகுப்பு மாணவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
இதனை அடுத்து தான் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதையும் மதிப்பெண் பட்டியலில் சேர்த்து ஒரு போஸ்டர் டிசைன் செய்து அதனை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். மேலும் தான் பத்தாம் வகுப்பு தேர்வில் பாஸ் ஆக மாட்டேன் என்று கேலி செய்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம் என்று கூறியுள்ள அந்த மாணவர் தன்னை பாஸ் ஆகிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்
மாணவர் நிஷாந்தின் இந்த சமூக வலைதள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஏராளமான காமெடி கமெண்ட்டுக்களையும் லைக்ஸ்களையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது