கோல்டன்குளோப்ஸ் விருது பெற்ற முதல் திருநங்கை… உருக்கமான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,January 11 2022]

இந்த ஆண்டிற்கான கோல்டன் குளோப்ஸ் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து முடிந்துள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி தொடர்களுக்கான சிறந்த நடிகை எனும் பிரிவில் திருநங்கை ஒருவர் விருது பெற்றிருப்பது உலகம் முழுவதும் வரவேற்பு பெற்றிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த திருநங்கை எம்.ஜெ. ரோட்ரிகியுஸ். இவர் நெட்ப்ளிஸ்க்காக தயாரிக்கப்பட்ட “போஸ்“ எனும் தொலைக்காட்சி தொடதில் நடிப்பதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 26 எபிசோட்களைக் கொண்ட இந்தத் தொடர் கடந்த 2018 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகியது. இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ரோட்ரிகியுஸ்க்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வந்தன.

இதையடுத்து அந்த ஆண்டிற்கான எம்மி விருதிற்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது விருதுபெறாத ரோட்ரிகியுஸ் தற்போது 2020 ஆண்டிற்கான கோல்டன் குளோப்ஸ் விருதைத் தட்டிச்சென்றுள்ளார்.

31 வயதான ரோட்ரிகியுஸ் தனது 7 வயதிலேயே ஆணாக மாற விரும்பினாராம். இதனால் தனது பெற்றோரின் சம்மதத்துடன் தனது 14 வயதில் முறைப்படி ஆணாக மாறியிருக்கிறார். மேலும் இசையில் ஆர்வம் கொண்ட இவர் இசைக்கல்லூரி மற்றும் கலைக்கல்லூரியில் இணைந்து படித்துள்ளார். அதைத்தொடர்ந்து நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட கடந்த 2011 ஆம் ஆண்டு “ரென்ட்“ எனும் மேடை நாடகத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து 2012- 2016 வரை பல்வேறு மேடை நாடகங்களில் நடித்து பாராட்டை குவித்து வந்த இவர் “நர்ஸ் ஜாக்கி“, தி கேரி டைரிஸ்“ லுக் கேஜ்“ போன்ற தொலைக்காட்சி தொடர்களில் இணைந்து நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது “போஸ்“ தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரெட்ரிகியுஸ் கோல்டன் குளோப்ஸ் விருதைத் தட்டிச்சென்றுள்ளார். மேலும் திருநங்கை சமூகத்தில் இருந்து பெரிய விருதைத் தட்டிச்சென்ற முதல் நபராகவும் இவர் விளங்குகிறார். இதையடுத்து பேசிய ரொட்ரிகியுஸ் “எனது சமூகத்திற்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்” எனக் கூறியிருப்பது பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.