அஜித், சிவகார்த்திகேயன் பட நடிகர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்: அதிர்ச்சியில் திரையுலகினர்

  • IndiaGlitz, [Thursday,February 24 2022]

அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்த நடிகர் மற்றும் இயக்குனர் ஒருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது திரையுலகினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

அஜித் நடித்த ’ஆரம்பம்’ சிவகார்த்திகேயன் நடித்த ’வேலைக்காரன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், பல இந்தி மராத்தி, பெங்காலி, தெலுங்கு படங்களிலும் நடித்தவர் மகேஷ் மஞ்ச்ரேக்கர். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சில திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் மகேஷ் மஞ்ச்ரேக்கர், மராத்தி படம் ஒன்றை இயக்கினார். இந்த படம் கடந்த மாதம் வெளியான நிலையில் இந்த படத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இது குறித்து மகேஷ் மஞ்ச்ரேக்கர் கூறியபோது இந்தப் படம் தணிக்கை செய்யப்பட்ட போது எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் இது வயது வந்தோருக்கான படம் என்றுதான் நாங்கள் அறிவித்து உள்ளோம் என்றும் பெண்களை மோசமாக எந்த வகையிலும் சித்தரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

More News

'அரபிக்குத்து' பாடலை பாடியவரே டான்ஸ் ஆடிவிட்டார்: வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பது இந்த பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரலாகி என்பது தெரிந்ததே.

பூஜா ஹெக்டேவின் அடுத்த படத்தின் செட் செலவு மட்டும் ரூ.100 கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே நடித்துள்ள அடுத்த படத்துக்கு செட் செலவு மட்டும் 100 கோடி ரூபாய் என்ற தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் உக்ரைன் விவகாரம்… ஆபத்தில் முடியுமா?

உக்ரைன் நேட்டா அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா இன்று அந்நாட்டின் மீது இராணுவ நடவடிக்கையைத்

தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு: நடிகர் சிம்பு மீதான வழக்கு ரத்து!

சிம்பு மீது தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் எனவே அந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அம்மாவாக டிரெயினிங்: காஜல் அகர்வாலின் வேற லெவல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் பதிவு செய்த வேற லெவல் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.