யூரோ கோப்பை… வெளியேறிய போர்ச்சுக்கல்? திட்டித் தீர்த்த ரொனால்டோவின் வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
யூரோ கால்பந்து கோப்பை தொடர் போட்டியில் இருந்து உலகின் நம்பர் ஒன் அணியான போர்ச்சுகல் அணி வெளியேறி இருக்கிறது. இதனால் பெல்ஜியம், செக் குடியரசு அணிகள் தற்போது கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
யூரோ கால்பந்து கோப்பை தொடரின் இறுதி 16 அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணியுடன் போர்ச்சுகல் அணி மோதியது. கடும் நெருக்கடி கொண்ட இந்தப் போட்டியில் பெல்ஜியத்தின் டாப் வீரர்களான ஈடன் ஹசார்ட், கெவின் டி புருய்ன் இருவரும் காயத்தினால் வெளியேறி இருந்தனர். இந்நிலையில் இரு அணி வீரர்களும் மாறி மாறி பந்தை வலைக்குள் அனுப்ப பேராடினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக 42 ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஹசார்டு ஒரு கோல் அடித்து பெல்ஜியம் அணியை முன்னிலை பெறச் செய்தார்.
இந்நிலையில் ஃப்ரி கீக் வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ தவறவிட்டார். இதனால் நிலைமை தலைகீழாக மாறி தொடரை விட்டே போர்ச்சுகல் அணி வெளியேறி இருக்கிறது. தற்போது கால் இறுதிச்சுற்றுக்கு பெல்ஜியம் மற்றும் செக் குடியரசு அணிகள் முன்னேறி உள்ளன.
யூரோ கால்பந்து கோப்பை போட்டியில் இருந்து போர்ச்சுகல் வெளியேறியதை அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெல்ஜியம் கோல் கீப்பரும் தனது முன்னாள் சக வீரருமான திபோ கோர்ட்டுவாவிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில் “அதிர்ஷ்டம் தானே… இன்று பந்து உள்ளே செல்ல விரும்பவில்லை… குட்லக் மேன்” எனத் தெரிவித்து உள்ளார். இந்த விடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
??️ "[The ball] didn't want to go in today."
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021
?????????? Thibaut Courtois & Cristiano Ronaldo after the final whistle...#EURO2020 pic.twitter.com/oBDyZG3f8j
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout